அட்சய திரிதியை ஸ்பெஷல்.. கும்பகோணம் 12 கருட ஸேவை!

Published:

kumbakonan garudasevai4 - 2026

கும்பகோணம்: அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருட சேவை நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3 வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் உத்ஸவ பெருமாள் திருமேனிகள் எழுந்தருளி, டி.எஸ்.ஆர். பெரியதெருவில் அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

12 பெருமாள் கோயிலின் திருமேனிகளும் ஒரு சேர ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். அதன்படி அட்சய திருதி நாளான இன்று காலை 9.00 மணி முதல்12.30 வரை கும்பகோணம் டி.எஸ்.ஆர் பெரிய தெருவில் உள்ள அலங்கார பந்தலில் கருடசேவை நடைபெற்றது!

இதை முன்னிட்டு 1.சாரங்கபாணி சுவாமி, 2.சக்கரபாணி சுவாமி, 3. ராமசுவாமி, 4.ஆதிவராக சுவாமி, 5. ராஜகோபால சுவாமி, 6. பாட்சாரியார் தெரு கிருஷ்ண சுவாமி, 7. வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராம சுவாமி, 8. சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராம சுவாமி, 9. மல்லுகச்செட்டித்தெரு சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி, 10.புளியஞ்சேரி வேணுகோபால் சுவாமி,  11. கொட்டையூர் நவநீத கிருஷ்ண சுவாமி, 12. ப்ரம்மன்கோயில் வேதநாராயனன் வரதராஜன் , 13. தோப்புத்  தெரு ராஜகோபாலன், 14. மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி, 15. அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி ஆகிய கோவில்களின் உத்ஸவ மூர்த்திகள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்கார ஸேவையில் எழுந்தருள நேர் எதிரே ஆஞ்சநேய பெருமாளும் எழுந்தருளினார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இந்த12 கருட சேவையின் வழக்கமாக… இந்த உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன் அந்த பெருமாள்களுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

kumbakonan garudasevai16 - 2026 kumbakonan garudasevai1 - 2026 kumbakonan garudasevai2 - 2026 kumbakonan garudasevai3 - 2026kumbakonan garudasevai5 - 2026 kumbakonan garudasevai6 - 2026 kumbakonan garudasevai7 - 2026 kumbakonan garudasevai8 - 2026 kumbakonan garudasevai9 - 2026 kumbakonan garudasevai10 - 2026 kumbakonan garudasevai11 - 2026 kumbakonan garudasevai12 - 2026 kumbakonan garudasevai13 - 2026 kumbakonan garudasevai14 - 2026 kumbakonan garudasevai15 - 2026

Related articles

Recent articles

spot_img