

இந்தியாவில் பேருந்து உள்பட மற்ற வாகனங்களில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்வதுதான் குறைவான கட்டணம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ரயிலில் ஐந்து நட்சத்திர சொகுசு வசதியுடன் பயணம் செய்ய 20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கும் மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சேவையை இந்தியன் ரயில்வே வழங்கிவருகிறது. இதில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் ஏதேனும் நான்கு வழித்தடங்களை தேர்வு செய்துகொள்ளலாம். நான்கு நாட்கள் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு ஜிஎஸ்டி வரி உடன் சேர்த்து சுமார் 20 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்த சொகுசு சேவையை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது. பெரும்பாலும் வெளிநாட்டினர் மட்டுமே இந்த ஆடம்பர பயண அனுபவத்தை பெற்று வருவதாகவும் ஒரு சில இந்தியர்களும் சில சுற்றுலாத் தலங்களுக்கு இந்த ரயில்களில் சென்று வருவதாகவும் ஐஆர்சிடிசி கூறியுள்ளது.
இந்த ரயிலில் ஒவ்வொரு பயணிக்கும் தனிநபர் சேவை வழங்கப்படுவதாகவும் சொகுசு அறை, ஆடம்பரமான வசதி, வைபை வசதி, லைவ் சேனல்கள் டிவி, டிவிடி பிளேயர், குளிர்சாதன அறை, இரண்டு பெட்ரூம்கள், அட்டாச் பாத்ரூ உள்பட பல்வேறு வசதிகளுடன் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள அனைத்து வசதிகளையும் இருக்கும்.


இந்த ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ஏராளமானோர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு பதிலாக நான் சொந்த வீடு வாங்கி விடுவேன் என்று ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த ரயில் பணக்காரர்களுக்கு மட்டுமே உரியது என்றும் ஏழை எளியவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் ஒரு சிலர் பதிவு செய்துள்ளனர்.
