ரஜினியின் காலா டீசர் வெளிவந்து 20 மணி நேரத்தில் 9.4 மில்லியன் ஹிட்ஸ்-ஐ கடந்து புதிய சாதனை!

சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் வீடியோ

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’.

பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்த ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடும் என்று தனுஷ் அறிவித்திருந்தார்.

ஆனால், ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக தனுஷ் தெரிவித்தார்.

இதனால் மார்ச் 2ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிருந்தார்.

இந்நிலையில்,2ம் தேதி இன்று காலை 10 மணிக்குத்தான் வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு, 1-ம் தேதி இரவு 12 மணியளவில் காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார்.

ரஜினியின் காலா டீசர் வெளிவந்து 20 மணி நேரத்தில் (இரவு 8 மணி வரை) 9.4 மில்லியன் ஹிட்ஸ்-ஐ கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த டீஸரை இது வரை 9.4 மில்லியனுக்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் காலா டீசர் மற்றும் அந்த டீசரில் வரும் ரஜினியின் புகைப்படங்களுமே வைரலாக வலம் வருகின்றன.

ட்விட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் காலா டீசர்தான் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.