மோதிஜி நாடாளுமன்ற மத்திய அரங்கில் ஆற்றிய உரை, 7.6.24
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
நீங்கள் அனைவரும், என் மீது வெளிப்படுத்தியிருக்கும் நம்பிக்கை, வெளிப்படுத்தியிருக்கும் அன்பு, இவை தவிர, அளித்திருக்கும் ஆதரவு, பாரதநாட்டு ஜனநாயகத்தில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்று உள்ளபடியே நம்புகிறேன்.
எத்தனை உங்களுக்கு நன்றி தெரிவித்தாலும் அது குறைவு தான் மேலும் நான் நம்பிக்கை அளிக்கிறேன், மோதி நான், உங்களுடைய ஆர்வங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான, உழைப்பினிலே எந்தக் குறைவும் வைக்க மாட்டேன். நானெடுத்த பிறப்பு, ஒரே காரணத்துக்காகவே.
ஒரு வாழ்க்கை ஒரே இலக்கு. அது தான், என்னுடைய, பாரத…. அன்னை. இந்த இலக்கு, 140 கோடி நாட்டுமக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான பணியில், என்னை அர்ப்பணிப்பது. இந்த இலக்கு, 140 கோடி மக்கள் ஆயிரமாண்டுகளாக தலைமுறைதலைமுறையாக அனுபவித்து வரும் கஷ்டங்களிலிருந்து, விடுதலை அளித்து, கௌரவத்தோடு உலகில் இருக்க வேண்டும்.
என்னுடைய நாட்டுமக்கள் ஒவ்வொருவரையும், உலகம் நம்மவர்களைக் கண்டு, அவர்கள் எண்ண வேண்டும், ஆம் இவர் இந்துஸ்தானத்தவர், இவரை சந்தித்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று!! இதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அவர்கள் பேரார்வத்தோடு அட நீங்கள் இந்தியரா, நான் உங்களுடன் கைகுலுக்கவா, எனக்கும் கொஞ்சம் சக்தி கிடைக்குமே!! நான் தேசத்தை இந்த உயரத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.
மேலும் நண்பர்களே!! எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உங்களுடைய நம்பிக்கையும் உங்கள் ஆதரவும், உங்களுடைய அனுபவமும், மிகப்பெரிய விளைவுகளைத் தரும் சாத்தியக்கூறுகளைத் தாங்கி வந்திருக்கிறது.
மக்களவையின் இந்தப் பதிப்பு, அந்த அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி வைக்கும். நான் மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும், இதய பூர்வமாக பலப்பல நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.