அண்ணாமலை இன்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியவை, சமூகத் தளங்களில் பேசுபொருளானது. சில விஷயங்களை நேரடியாகச் சொல்லியும், சில விஷயங்களை அவர் சொல்லாமல் மறைமுகமாகவும் சொல்லியிருக்கிறார்.
- தமிழகத்தில் சுத்தமான நேர்மையான அரசியலை கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையில தான் இருக்கிற வேலையை விட்டுட்டு பாஜக வில் சேர்ந்தேன். அப்படிப் பட்ட அரசியலை கொடுக்கக் கூட்டணி அமையும் படி மோடி செய்வார் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறேன்.”
(இதன் மூலம் தற்போதைய கூட்டணி சுத்தமான நேர்மையான ஆட்சியைக் கொடுக்கக் கூடிய கூட்டணி இல்லை என்று மறைமுமாகச் சொல்கிறார்.)
2)”தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதிக்குக் கட்டு பட்டு சபை நாகரிகம் கருதி சில நேரங்களில் என்னுடைய மனசாட்சிக்கு எதிராகப் பேசியிருக்கிறேன்”
(அதாவது எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் தான் கூட்டணி வேட்பாளர். அவரை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க உயிரைக் கொடுத்து உழைப்போம் என்று அண்ணாமலை சொன்னது தலைமையின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு சொன்ன வார்த்தைகள் மட்டுமே.)
3)”நான் அதிமுகவைப் பற்றி விமர்சிக்காமல் சும்மா இருந்தாலும் என்னைப் பற்றி அதிமுகவினர் விமர்சித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. லட்சுமண ரேகையை அவர்கள் மீறக் கூடாது”
(இதன் மூலம் எடப்பாடியின் அல்லக்கைளை மட்டுமல்லாமல் நேரடியாக எடப்பாடியையும் எச்சரிக்கிறார் அண்ணாமலை. எடப்பாடியின் அடிவருடிகள் சிலரை வைத்து, அண்ணாமலைக்கு எதிராகக் குரைக்க விடுபவர் எடப்பாடி தான் என்பதை மறைமுகமாக்ச் சொல்கிறார். இந்த கபட நாடகத்தில் திராவிட பாஜக.,வுக்கும் பங்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர்.)
4)” இன்னும் ஒன்னு ரெண்டு மாதத்தில் நேர்மையான கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையுடன் கட்சியின் தொண்டனாகக் காத்திருக்கிறேன். அமையா விட்டால் விலகிச் சென்று என்னுடைய விவசாய வேலையில் இறங்கி விடுவேன்”
(இது பாஜக தலைமைக்கும் மோடிக்கும் அவர் அனுப்பும் செய்தி)
5)”சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான்.
Back up இல்லாத என்னைப் போன்றவர்கள் எப்படி தனிக்கட்சி துவங்க முடியும்? நமக்கு ஒத்து வரவில்லையென்றால் கச்சியிலிருந்து விலகி சமூக சேவை செய்யும் அமைப்பை ஏற்படுத்தி மக்களுக்காக உழைக்கலாமே, சேவை செய்யலாமே?
(அதாவது நான் இந்த எதிமுக & திபாஜக கூட்டத்துக்கு விட்டுக் கொடுத்து விட மாட்டேன். அப்படி எல்லாம் என்னைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.ஏதாவது ஒரு வகையில் களத்தில் நிற்பேன்.)
6)”பதவி என்பது வெங்காயம் மாதிரி. பதவியை வாங்கிக் கொண்டு “லெட்டர் பேடை” வைத்துக் கொண்டு பதவியைச் சொல்லிக் கொண்டு காரில் போக நான் அரசியலுக்கு வரவில்லை.”
(இது திபாஜக கூட்டத்துக்கு அண்ணாமலை கொடுத்திருக்கும் சிறப்பான “டோஸ்”)
ஆக இப்போதிருக்கும் தேர்தல் கூட்டணி ” சும்மா ” தான் என்று தெரிகிறது. அண்ணாமலையின் விருப்பமான சுத்தமான நேர்மையான கூட்டணி அமைய வேண்டும். அதில் எதிமுக., வுக்கு இடம் இருக்கக் கூடாது.
K Shanmugananda (Modi rajyam)


