வழக்கமான தடபுடல் இன்றி… புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 2.0 படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப் பட்டது. திருச்சி மாவட்டத்தில் L A திரை அரங்கில் இன்று அதிகாலை 4.50 க்கு 2.0 படம் திரையிடப்பட்டது. வழக்கமான போஸ்டர், பேனர், செலவுகளை இந்த முறை தவிர்த்து புயல் பாதித்த பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் வாங்க ரஜினி மக்கள் மன்றத்தினர் செலவு செய்தனர்.

திருச்சி மாவட்ட செயலாளர் கலீல் மற்றும் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்களை புயல் பாதித்த பகுதியான தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.