கரூரில் நடைபெற்ற இந்து முன்னணி விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்னும் தீர்மானம் முக்கியமானதாகக் கூறப்பட்டது.

மத ரீதியில் மக்களைப் பிரித்து சலுகைகளை வழங்காமல் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கரூரில் இந்து முன்னணி சார்பில் டிச. 30ஆம் தேதி நடைபெற்ற இந்து விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூரில், திருச்சி கோட்ட இந்து முன்னணி சார்பில் இந்து விழிப்புணர்வு மாநாடு மாலை நடைபெற்றது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார் மாநில அமைப்பாளர் பக்தவச்சலம், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்து முன்னணியின் செயல்பாடுகள் குறித்துப் பேசினர்.

கூட்டத்தில் இந்துக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி யாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப் பட்ட பிறகு காணாமல் போன் 1,500 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.150 கோடி மதிப்பிலான சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

எனவே, ஐஜி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மதரீதியில் மக்களை பிரித்து சலுகைகளை வழங்காமல் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending