இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் அண்மையில் கட்டப்பட்ட இந்துக் கோவிலை மீட்பதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வங்க்வானி, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், அதில், கைபர் மாகாணத்தில் காரக் மாவட்டத்தில் உள்ள டெரி கிராமத்தில் பரம்ஹன்ஸ்ஜி மகராஜ் சமாதி கோவில் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது, பரம்ஹன்ஸ் ஜி மகராஜ், இந்துவாக இருந்து இஸ்லாத்துக்கு மாறி விட்டதாக மாகாண தலைமைச் செயலர், ஐஜி, கமிஷனர் ஆகியோர் பதிலளித்தனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலை மீட்பதற்கு சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நசிர் உல் முல்க் தலைமையிலான 2 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர் வகார் அகமது, இந்த விவகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அவரது வாதங்களைக் கேட்ட அமர்வு, பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் கோவிலை மீட்குமாறு, கைபர் மாகாண அரசுக்கு உத்தரவிட்டது. பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் என்ற இந்து மதத் துறவி, 1919ல் பாகிஸ்தானில் மரணம் அடைந்தார். அவரது உடல் டெரி கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய நினைவாக, அவரது பக்தர்கள் கோவில் ஒன்றை டெரி கிராமத்தில் எழுப்பி, வழிபட்டு வந்தனர். 199ஆ7ம் ஆண்டுக்கு பின்னர், அப்பகுதியை சேர்ந்த சிலரால், அந்த கோவில் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனை மீட்கும்படிதான், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இந்து கோயிலை மீட்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari