சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வின் உடல் தேசிய மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. லீயின் இறுதிச் சடங்கில் பாரதப் பிரதமர் மோடி உள்ளிட்ட சுமார் 23 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். லீ குவான் யூ மறைவைத் தொடர்ந்து சிங்கப்பூரில் ஒருவார கால துக்கம் அனுசரிக்கப்பட்டது. அவரது உடல் சிங்கப்பூர் நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்தது. லீ குவான் யூவின் உடலுக்கு கடந்த ஒரு வார காலமாக சுமார் 5 லட்சம் பேர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இன்று மதியம் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரது உடல் சிங்கப்பூர் கொடி போர்த்தப்பட்டு திறந்த வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தை ஊர்வலம் அடைந்ததும் அங்கு 21 குண்டுகள் முழங்க முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. லீ இறுதிச் சடங்கில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் இன்று காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். லீயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். லீயின் மறைவிற்கு பிரதமர் மோடி … லீ மாபெரும் சிந்தனையாளர்.இந்தியாவின் சிறந்த நண்பராகத் திகழ்ந்தவர் என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week