பாகிஸ்தானிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட… சீக்கிய ஊடகவியலாள இளைஞன்!

உரத்த சிந்தனை உலகம் சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
pakistan sikh murder - 2026

இவர்தான் ரவீந்தர் சிங். பெஷாவரில் பாக்கிஸ்தானிய மதவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள 25 வயது சீக்கிய இளைஞர். இவர் செய்த தவறு, இவரின் அண்ணன் பாக்கிஸ்தானின் முதல் சீக்கிய ஊடகவியலாளராக பணிபுரிவது தான். அடுத்த மாதம்தான் இவருக்கு திருமணம் நடக்க இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளியன்றுதான் குருநானக் பிறந்த இடமான குருத்வாரா நன்கானா சாஹிப் எனும் லாகூரில் உள்ள சீக்கிய புனித வழிபாட்டு தளத்தை பாக்கிஸ்தானிய மதவாதிகள் சூரையாடினார்கள். அதோடு ஜெக்ஜித் கவுர் எனும் சீக்கிய பெண் கதற கதற கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டது உலகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் சமீபத்தில்தான்.

இத்தனை கொடூரங்களை நிகழ்த்தும் பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷிய பெரும்பான்மை மதத்தினர்களுக்கு ஏன் இந்தியா குடியுரிமை தரவில்லை என்றுதான் தி.மு.க.வும், காங்கிரஸும் போராடிக் கொண்டிருக்கின்றன.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அது நம் தேசத்தின் சரித்திர பிழைகளை திருத்த வந்த சட்டம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.