அமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி!

Published:

அமெரிக்க டாலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் இன்றைய தகவல் படி , அமெரிக்க டாலருக்கு நிகராக இலங்கை ரூபாய், ஒரு டாலருக்கு 200.46 ரூபாய் என பரிமாற்றம் ஆகியுள்ளது.

doller vs srilankan rupee - 2026

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் வழக்கமான நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த 20ஆம் தேதி முதல் முடங்கிப் போனது. இந்நிலையில், இலங்கையின் முக்கிய வர்த்தகங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன.

முன்னதாக, இலங்கையில் முதல் கொரோனா தொற்று நோயாளி கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அடையாளம் காணப்பட்டார். அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 181.44 ரூபாயாக இருந்தது. தொடர்ந்து மார்ச் மாதம் 11ஆம் தேதி இலங்கையில் இரண்டாவது கொரோனாவால் பாதிக்கப் பட்டவர் அடையாளம் காணப்பட்டார். அன்று, அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 182.44 ரூபாய் என்று இருந்தது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
srilankan rupee - 2026

இவ்வாறு இரு நோயாளிகளுக்கு இடையிலான அந்த ஒன்றரை மாத கால இடைவெளியில் அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய் என்ற அளவிலே வீழ்ச்சி கண்டிருந்தது. ஆனால், மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரையான இந்த 27 நாட்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 18.02 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை நாணய பரிமாற்று வர்த்தக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், வெகுவிரைவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img