லண்டன் தாக்குதலையடுத்து இஸ்லாமிய எதிர்ப்பு கருத்து சொன்ன பத்திரிகையாளர் பணி நீக்கம்!

உலகம் சற்றுமுன் தொழில்நுட்பம் பொது தகவல்கள்

Katie McHugh - 2026

ப்ரிட்பர்ட் தளத்தின் எடிட்டராகப் பணியாற்றும் கேத்தெ மெக்ஹக், லண்டன் தாக்குதலை அடுத்து குறிப்பிட்ட இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துகளுக்காக பணி விலக நேர்ந்துள்ளது.

அவர், முஸ்லிம்கள் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதமும் இல்லை என்று தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்தார். மேலும், முஸ்லிம் குடியேற்றம், இஸ்லாம் குறித்து நான் சொன்ன உண்மைகளுக்காக, ப்ரிட்பர்ட் நியூஸ் என்னை பலிவாங்கியிருக்கிறது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சனிக்கிழமை அவர் பதிவிட்ட டிவிட்டரில், “இங்கிலாந்தில் முஸ்லிம்கள் இல்லை என்றால், இது போன்ற மோசமான பயங்கரவாத தாக்குதல்களும் இருக்காது” என்று கூறியிருந்தார்.

இதை அடுத்து பேஜ் வாஹ்தா என்பவருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட மெக்ஹக், நாம் ஸ்மார்ட்டாக இல்லாவிட்டால் மோசமான நிலைக்குப் போய்விடுவோம் என்று ட்ரம்ப் குறிப்பிட்டதைக் கூறியுள்ளார்.

முன்னதாக இதே போல் மிலோ இயன்னோபோலஸ் எனும் எடிட்டரும் கடந்த பிப்ரவரியில் இந்தத் தளத்தில் இருந்து பணி விலகியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.