கர்நாடகா அணைகளில் உள்ள நீர் நிலவரத்தை பார்வையிட வருமாறு ரஜினிகாந்தை அழைத்துள்ளேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு கர்நாடகாவிற்கே போதாதநிலையில் உள்ளது கர்நாடக அணைகளின் நீர் நிலைமை பற்றி ரஜினிகாந்த் புரிந்துகொள்வார் என நினைக்கிறேன். பார்வையிட்ட பின்னரும் ரஜினிகாந்த் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரினால், அதுகுறித்து விவாதம் நடத்த தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



