டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் விழ காரணமாக இருந்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
தோனி இதுவரை 216 விக்கெட்கள் விழ காரணமாக இருந்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கம்ரான் அக்மல் 215 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குமார் சங்ககாரா 202 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மேலும் டி20 போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்தார். டி20 போட்டிகளில் டோனி இதுவரை 144 கேட்சுகள் பிடித்துள்ளார்.



