
1.44 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை ரயிலில் யாரேனும் தவற விட்டிருந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபரில் லுசர்னே ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் ஒன்றில் 1.44 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் இருந்துள்ளன.
அந்த தங்கக்கட்டிகளை தவற விட்டவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இதுவரை அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து ரயிலில் தங்க கட்டியை தவறவிட்டவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என லுசர்னே போலிசார் அறிவித்துள்ளனர்.
இதேபோன்று ஸ்விட்சர்லாந்தில்வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழிவறைகளில் கட்டுகட்டாக பல லட்சம் மதிப்பிலான யூரோ பணம் கடந்த காலங்களில் கண்டெடுக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.