கொரோனா: ரூ.1000 க்கும் குறைவாய் கோவிஷீல்டு விற்கப்படும்: சீரம் இன்ஸ்ட்டிடியூட்!

உலகம் சற்றுமுன்
covishild

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு உலக நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரிட்டன் அரசு, அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.

இந்தியாவில் இந்த மருந்தை தயாரிக்க சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்குள் 30 முதல் 40 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக சீரம் இன்ஸ்ட்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார். மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலைப் பெற்று தயாரிப்பை தொடங்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.