ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை தளர்வுகள் இல்லா ஊரடங்கு!

சற்றுமுன் தமிழகம்
srivelliputhur

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா தொற்று அதிகரிப்பால் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்து. தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 486 ஆக உயந்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்ட நிகழ்வு அலுவலர் முருகன் தலைமையில் நடைபெற்ற வியாபாரிகள் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் ஜுலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தபட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும் முழு ஊரடங்கின் போது பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.