ஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
rajinikanth
rajinikanth

வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் நடிகர் ரஜினி காந்த் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆன்மிக அரசியல் நிச்சயம் உருவாகும் என்றும், குறிப்பாக, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்…

வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் அற்புதம் அதிசயம் நிகழும்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.