கொரோனா: தொற்று உள்ளவர்களை கண்டறியும் நாய்கள்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
corona-dog

கொரோனா சோதனையை அதிக படுத்த பல்வேறு நாடுகள் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் ராணுவ மோப்ப நாய்களை வைத்து கொரோனவை கண்டறிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெர்மனியின் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி ஜெர்மனி ராணுவத்தில் உள்ள எட்டு மோப்ப நாய்களுக்கும் ஒரு வாரம் மட்டுமே, கொரோனா தொற்றுள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்று அல்லாதவர்களிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளைக் கண்டுபிடிக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

corono-dog-2

இந்த ராணுவ மோப்ப நாய்கள் நேர்த்தியாக கொரோனா தொற்றுள்ள மாதிரிகளை கண்டுபிடித்ததால் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இப்படி ஆயிரம் மாதிரிகளைக் கொண்டு பரிசோதனை செய்ததில் சிறப்பாக செயல்பட்டு சரியாக கண்டுபிடித்தது.

corona-dog-1

இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என மோப்ப ராணுவ மோப்ப நாய்களை கொண்டு கொரோனா தொற்றுள்ளவர்களை அடையாளம் காணலாம் என்று இந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஆய்வு இன்னும் தொடக்க கட்டத்தில் மிக விரைவில் முழு வீச்சில் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.