வீட்டு வாசலில் மருத்துவர் செய்த செயல்: பெண்மணி புகாரில் வழக்கு பதிவு!

Published:

dr-pro

வாகன பார்க்கிங் காரணமாக எழுந்த மோதலை தொடர்ந்து, ஏ.பி.வி.பி தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஆலந்தூர் காவல் நிலையத்தில் பெண்மணி அளித்திருக்கும் புகாரில் டாக்டர் சண்முகம் அவரின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தாகவும், அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய மாஸ்க் மற்றும் குப்பைகளை தனது வீட்டு வாசலில் விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சி படங்களையும் அவர் கொடுத்துள்ளார்.

62 வயதான அந்தப் பெண், டாக்டர் சுப்பையா சண்முகம் வசிக்கும் அதே குடியிருப்பில் வசித்து வருகிறார். வாகன பார்க்கிங் தொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. டாக்டர் சுப்பையா, அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான இடத்தில் கார் பார்க் செய்ய அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் இது தொடர்பில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையை வைத்து, டாக்டர் சுப்பையா, பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக, காவல் நிலையத்தில் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சியை கொடுத்துள்ளார்! ஆலந்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்தப் பெண்ணின் மருமகனும் ஸ்டாண்டப் காமெடியனுமான பாலாஜி விஜயராகவன் அவருக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்று குரல் கொடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தார். இதை அடுத்து, இந்த விவகாரம் வைரலானது.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

இந்நிலையில்,  டாக்டர் சுப்பையா சண்முகம் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சுப்பையா உடனடியாக மறுத்திருந்தார். “என் மீது உள்நோக்கத்துடன் புகார் தரப்பட்டுள்ளது.. இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்… சிசிடிவி காட்சிகள் பொய்யாக சித்திரிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் புரிந்துணர்வற்ற விதத்தில் புகார் கொடுக்கப் பட்டதாகவும், இரு தரப்புக்கும் இடையே சமாதானம் செய்து பிரச்னை தீர்க்கப் பட்டு விட்டதாகவும், ஏபிவிபி தரப்பில் தகவல் வெளியானது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img