தெருவில் புலியாய் வலம் வந்த நாய்!

Published:

dog

புலி வேடத்தில் சுற்றித்திரிந்த தெருநாயால் பரபரப்பு! வைரல் புகைப்படங்கள்

புலியைப் போன்று இருக்கும் இந்த தெரு நாயின் படங்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்

.மலேசியாவில் புலி போன்று பெயிண்ட் அடிக்கப்பட்ட நாய் ஒன்று தெருவில் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று, புலியைப் போல் சுற்றித்திருந்தது. இந்த போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவ, மலேசியா விலங்கு நல அமைப்பின் கவனத்துக்குச் சென்றது. இதனையடுத்து அந்த நாய் எந்தப் பகுதியில் சுற்றித்திரிகிறது என்பதை கண்டுபிடித்தனர். .

ஆனால், தெருநாய்க்கு புலியைப் போன்ற தோற்றத்தில் பெயிண்ட் அடித்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.

tiger

அந்த தெருநாயை மீட்ட விலங்கு நல அமைப்பினர், அதை சரிசெய்ய முயற்சி செய்து வருகின்றனர். நாயின் உடலில் அடிக்கப்பட்ட பெயிண்ட் விஷத்தன்மை வாய்ந்தது என்றும், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

மலேசியா விலங்கு நல அமைப்பானது புலியைப் போன்று இருக்கும் தெருநாயின் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது..

புலியைப் போன்று இருக்கும் இந்த தெரு நாயின் படங்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். பலர் இதை குட்டிப்புலி என்கின்றனர். இன்னும் சில விலங்கு ஆர்வலர்கள், நாயை கொடுமைப்படுத்தியுள்ளதாகவும், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img