மால்டா பிரதமரின் ஊழலை பனாமா பேப்பர்ஸில் அம்பலப்படுத்திய பெண் ஊடகவியலாளர் காரில் குண்டு வீசிப் படுகொலை!

உலகம் சற்றுமுன்

daphne caruana galizia - 2026

மால்டா நாட்டின் பிரதமர் ஜோசப் மஸ்கட்டின் ஊழல்களை பனாமா பேப்பர்ஸ் மூலம் வெளிக்கொண்டு வந்த பெண் ஊடகவியலாளர் கேருவானா கலீஸியா சென்ற கார் மீது வெடிகுண்டுகளை வீசி மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாக, அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மால்டா. இங்கே, டாஃப்னே கேருவானா கலீஸியா (53) என்ற பெண் ஊடகவியலாளர், புலனாய்வு இணையதளமாக, “வுமன் விக்கிலீக்ஸ்” என்ற ஒன்றைத் தொடங்கி எழுதி வந்தார். இதில் கலீஸியா எழுதிய கட்டுரைகள் பல புலனாய்வு ரீதியாக எழுதப்பட்டன. கடந்த 2016 ஆம் ஆண்டில், பனாமா பேப்பர்ஸில் வெளியான மால்டா நாடு குறித்த கட்டுரைகள் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்நாட்டின் பிரதமர் மஸ்காட்டின் மனைவியும், அந்நாட்டின் மின் துறை அமைச்சரும், அரசு உயரதிகாரி ஒருவரும் என அஸர்பைஜான் நாட்டில் இருந்து பணம் பெற்றதற்கான ஆதார தகவல்களை பனாமா பேப்பர்ஸ் மூலம் இவர் வெளியிட்டார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

பனாமா ஆவணங்களுடன் தொடர்புடைய அறிக்கைகள் உள்பட சர்ச்சைக்குரிய பலவற்றை இவர் வெளிப்படுத்தியதால், இவருக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்தன. இதனால், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி, இரு வாரங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தாராம். இந்நிலையில் திங்கள்கிழமை நேற்று அவர் வீட்டிலிருந்து வடக்கு மால்டாவில் உள்ள பிட்னிஜா என்ற கிராமத்துக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது மர்ம நபர்கள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வீசினர். இதில் காருடன் தூக்கி வீசப்பட்ட கலீஸியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து, அந்நாட்டு பிரதமர் மஸ்காட்டே செய்தி அறிவித்தார். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இவரது படுகொலை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மஸ்காட், இது மிகவும் கோழைத்தனமான தாக்குதல் என்றும், கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் தன்னைக் குறித்து தனிப்பட்ட வகையிலும், அரசியல் ரீதியாகவும் பல விதங்களில் விமர்சனங்களை தெரிவித்திருந்தாலும், இதை கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

பனாமா பேப்பர்ஸ் ஊடகம் பல நாடுகளின் தலைவர்கள், அரசுகள் ஆகியவற்றின் ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது குறிப்பிடத்தக்கது. அண்மையில், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் தனது பதவியை இழக்கக் காரணமாக இருந்ததும், இது வெளிப்படுத்திய ஊழல்கள் தான் காரணம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.