வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க இனி இந்தியா வர தேவையில்லை. அவர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போது ஓட்டளிக்க வேண்டுமெனில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் தேர்தலில் ஓட்டளிக்க இந்தியாவுக்கு வர வேண்டும். ஆனால் விரைவில் இந்த நடைமுறையில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. வாக்காளர்களாக பதிவு செய்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு பதில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை வாக்களிக்க அனுமதிக்கலாம். இதற்கான சான்று கடிதத்தை அனுப்பி வைத்தாலே போதும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பதில் உறவினர்கள் ஓட்டளிக்க முடியும் என்கிற சூழல் வர இருக்கிறது.


