ஆக்லாந்து: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்ல தகுதியான அணி நியூசிலாந்து என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி. விறுவிறுப்பான போட்டியில்,, கடைசி வரை துடிப்புடன் செயல்பட்டு, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தப் போட்டி குறித்து நிறைவு நிகழ்ச்சியில் பேசிய டி வில்லியர்ஸ், “ இது அற்புதமான போட்டியாக அமைந்தது. சிறந்த அணி வெற்றி பெற்றதாக நான் நினைக்கிறேன். எங்கள் வீரர்களிடம் இருந்து இதைவிட சிறப்பான ஆட்டத்தை நான் கோர முடியாது. சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினோம். தோல்வி அடைந்தது காயப்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்காக நாங்கள் விளையாடினோம். எங்களது விளையாட்டால் அவர்கள் பெருமைப் படுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி நியூசிலாந்து: டி.வில்லியர்ஸ்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

