டூப் போடாமல் சண்டைக் காட்சியில் நடித்த யாஷிகா ஆனந்த்!

கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
yashika - 2026

டூப் போடாமல் சண்டைக் காட்சியில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த்!

ஸோம்பி என்ற காமெடி பாணியிலான படத்துக்கு ஸோம்பி என்றே பெயர் சூட்டியுள்ளனர். யோகிபாபு நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸில் பெயர் பெற்ற யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்!

இவர்களுடன் கோபி, சுதாகர், டி எம் கார்த்திக், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம்ஜி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் குறித்து கூறிய யாஷிகா ஆனந்த், காமெடி படமான இதில் சண்டைக் காட்சிகள் நிறைய உள்ளன இந்த சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளேன்! நான் மிகவும் எதிர்பார்க்கும் படம் இது என்று கூறியுள்ளார்!

இந்தப் படம் நாளை வெளியாகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.