ராணுவத்தை பேஸ்புக்கில் விமர்சித்தவர் வெட்டிக் கொலை: இதுதான் இஸ்லாமிய பாகிஸ்தான்!

Reporters Diary அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

bilal khan - 2026

இஸ்லாமிய நடைமுறை நாடான பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் முகமது பிலால் கானுக்கு டுவிட்டரில் 16,000 பாலோயர்களும், யூடியூப், பேஸ்புக்கில் 22,000 பாலோயர்களும் உள்ளனர். https://www.facebook.com/BilalKhanUR

இவர், நேற்று அடையாளம் தெரியாத நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்! இதனை அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிலால் கான் தொடர்ந்து பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவுத்துறையை விமர்சனம் செய்து வந்துள்ளார். அவரது பேஸ்புக், டிவிட்டர் கணக்குகளில் உருது மொழியில் தொடர்ந்து இத்தகைய விமர்சனங்களை அவர் செய்து வந்துள்ளார்.

Muhammad Bilal Khan - 2026பிலால் கான் நேற்று நண்பருடன் வெளியே சென்றிருந்த நிலையில், அவரை மர்மநபர் வெட்டிக் கொன்றுள்ளார். அவருடைய நண்பருக்கும் இந்தத் தாக்குதலின் போது காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ராணுவத்தையும், உளவு அமைப்பையும் விமர்சனம் செய்ததால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக டுவிட்டரில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். .

ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டதை அடுத்து #Justice4MuhammadBilalKhan என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் வாசிகள் நியாயம் கோரி வருகின்றனர். இது டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.