December 6, 2025, 4:01 AM
24.9 C
Chennai

எஸ்றா துர்குணம்… என்ன எகத்தாளம்..? தெனாவெட்டுக்கு தீர்ப்பு தெரியுமா?!

esra sargunam - 2025

இந்துக்கள் முகத்தில் குத்துங்கள் இன்று வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார் எஸ்றா சற்குணம்!

கிறிஸ்தவ பாதிரியாரான எஸ்ரா சற்குணம் அரசியலில் தீவிர திமுக ஆதரவாளராகவும் இயங்கி வருகிறார். இவர் இந்துக்கள் குறித்தும் இந்துத்துவ கோட்பாடுகள் குறித்தும் அவ்வப்போது மிக மோசமான   கருத்துகளை பேசி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் !

ஒரு மாதத்துக்கு முன் வன்னியர் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தைச் சொல்லி சிக்கினார். அதற்கு பெருமளவில் எதிர்ப்பு வந்தது! இந் நிலையில் தொடர்ந்து எஸ்ரா சற்குணம் இந்து மதம் பற்றியும் இந்துக்கள் குறித்தும் ஒரு மேடையில் பேசியுள்ளார்.

தற்போது, மூஞ்சில குத்து ரெண்டு குத்து ரத்தம் வரட்டும் என்று எஸ்றா சற்குணம் பேசிய அந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது!

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் குறிப்பாக வாட்ஸ் அப் வாயிலாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த வீடியோவில் இந்து மதம் ஒரு புனையப்பட்ட மதம்; அப்படி ஒரு மதமே கிடையாது! இதையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள் டாக்டர் பாபு வர்கீஸ் போன்றவர்களிடம் இருந்து நிறைய பாயிண்ட்ஸ் எடுத்து அவர்களிடத்தில் சொல்லுங்கள்! அப்படி ஒரு மதமே கிடையாது நீங்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லுங்கள்! அவர்கள் ஏற்கவில்லை என்று சொன்னால், அவர்கள் முகத்தில் இரண்டு குத்துக்கள் விடுங்கள். பரவாயில்லை கடவுளே எங்களை மன்னித்து விடுங்கள் எனக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது என்று சொல்லி முகத்தில் குத்தி ரத்தம் வருவது மாதிரி செய்து அதற்குப் பிறகு ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு விடுங்கள் தொடர்ந்து உங்கள் பணிகளை செய்யுங்கள் என்று பேசியுள்ளார்

இவ்வாறு தொடர்ந்து இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்; ரத்தக் கிளறியைக் கிளப்ப வேண்டும் என்று குறியாக இருந்து வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார் சற்குணம்

இதை அடுத்து எஸ்ரா சற்குணம் பேசிய பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கண்டனம் தெரிவித்தார்!

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கண்டனத்தில்..

இந்துக்கள் முகத்தில் இரண்டு குத்து குத்து… ரத்தம் வரும்… என்று பேசிய வன்முறை பாதிரியார்  சற்குணத்துக்கு எதிராக தமிழக டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது இதேபோல் அவரவர் ஊர்களில் புகார் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்

இதை அடுத்து… தமிழக பாஜக சட்டப் பிரிவு செயலாளர் அஸ்வத்தாமன் டிஜிபியிடம் அளித்த புகார் மனுவில் எஸ்ரா சற்குணம் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசிவருகிறார்! கடந்த சில நாள்களுக்கு முன், குறிப்பிட்ட ஒரு ஜாதி குறித்து அவதூறாகப் பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார். அது குறித்து தமிழகம் முழுவதும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது!

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும் அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் மேடையில் பேசியுள்ளார்! அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவிவருகிறது! எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

இந்த வீடியோ தொடர்பாக சற்குணத்தை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, வீடியோவில் நான் பேசிய கருத்துக்கள் எல்லாம் உண்மை அது என்னுடைய தனிப்பட்ட கருத்து! இதை பல அறிஞர்களும் உறுதி செய்துள்ளனர்! இந்து என்பது ஒரு மதம் கிடையாது! ஒரு இடத்தைக் குறிக்கும் சொல்! இந்து மதம் அல்ல என்றார்!

சரி முகத்தில் குத்துங்கள் என்று கூறியுள்ளீர்கள் ஏன்? என்று கேட்டதற்கு, அதாவது பொதுவாக  பயன்படுத்தும் வார்த்தையை நாம் பயன்படுத்தியிருக்கிறேன்… என்றார்.

ரத்தம் வரட்டும் மன்னிப்பு கேட்கலாம் என்று பேசுகிறீர்களே என்று கேட்டபோது, அந்த மாதிரி நான் பேசல வீடியோவை மார்பிங் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார் !

முன்பு பேசியதெல்லாம் சரி என்றால் இது எப்படி வீடியோ மார்பிங் ஆகும் என்று கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் மழுப்பி விட்டார் எஸ்ரா சற்குணம்.

வீடியோ தொடர்பாக டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்களே என்று கேட்டதற்கு புகார் தானே..!  கொடுக்கட்டும் பார்த்துக்கிறேன்! என்று தெனாவட்டாக பதிலளித்தார்!

எஸ்றா சற்குணத்தின் தெனாவட்டுக்கு பின்னணியில் திமுக.,வும், சிறுபான்மை முகமூடியும் உள்ளதால், போலீஸில் புகார்கள் கொடுத்து எந்த பயனும் விளையப் போவதில்லை என்ற விரக்தி நிலைக்கு இந்து இயக்கத்தினர் வந்துள்ளனர்.

 

1 COMMENT

  1. கருணாநிதியின் கைக்கூலியாக செயல்பட்டு மேகலா தியேட்டர் அருகில் பெரிய நிலப் பரப்பை ஆட்டையைப் போட்டு அடந்த குறுகிய சாலையில் ஒவ்வொரு ஞ்சாயிரு அன்று மக்கள் போக்குவரத்தை சிரமமாக்கி வருபவர். பின்னர் எதிரில் உள்ள சுடுகாட்டு நிலத்தையும் அபகரித்து ‘போதனை’ செய்யும் இவரை எல்லாம் ஆன்மிகவாதியாக மட்டும் இல்லை, மனிதனாகவே எடுத்துக்கொள்ளக்க்கூடாது – அந்நிய நாட்டின் மதமாற்றம் செய்ய ‘ஆள் பிடிக்கும்’ ஏஜென்ட் தானே! ஏசுவே இவரை மன்னிக்கத் தயங்குவர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories