‘அந்த’ மாதிரி வீடியோ, புகைப்படம் அனுப்பி மாணவனுடன் உறவு! சிறை சென்ற ஆசிரியை!

Published:

Candice Barber 1 - 2026

பிரித்தானியாவில் பள்ளிக்கூட ஆசிரியருக்கு ஆண்டுக்கணக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான முழு பின்னணி வெளியாகியுள்ளது.

பக்கிங்காம்ஷியரை சேர்ந்தவர் காண்டீஸ் பார்பர் (35). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பள்ளி ஆசிரியையான காண்டீஸ் தன்னிடம் பயிலும் 15 வயது மாணவன் மீது தனி அன்பு செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

பின்னர் ஒரு கட்டத்தில் அவன் செல்போனுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதோடு வீடியோவும் அனுப்பியிருக்கிறார்.
மேலும் மாணவனை நேரில் சந்தித்து தனிமையிலும் இருந்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் மாணவரிடம் இருந்த மெசேஜ்கள், புகைப்படங்களை அழிக்க சொல்லி வலியுறுத்தியிருக்கிறார் காண்டீஸ்.

தான் ஆதாரத்தோடு சிக்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே அவ்வாறு செய்திருக்கிறார்.

பின்னர் தான் கர்ப்பமானதாக மாணவனிடம் கூறிய காண்டீஸ் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை நீயா அல்லது என் கணவரா என்பது உறுதியாக தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் காண்டீஸின் மோசமான செயல்கள் வெளியில் தெரியவந்த நிலையில் போலிசார் அவரை கைது செய்தனர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

அவர் மீதான வழக்கு அமெர்ஷம் சட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது காண்டீஸ்க்கு ஆறு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதோடு 16 வயதுக்கு உட்பட்ட சிறாரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக தனியாக 16 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு வழக்கில் தனியாக 10 மாதங்கள் சிறை தண்டனையும் சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர் வாழ்நாள் முழுவதும் தனது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முகவரி குறித்து போலிசாருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img