பைக்கில் சாகசம் செய்யும் முதியவர்!

Published:

bike baba - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பல இளைஞர்கள் சாலைகளில் ஸ்டண்ட் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக எக்ஸ்பிரஸ்வே மற்றும் திறந்தவெளி சாலைகளில் இளைஞர்கள் பைக்குகளில் ஸ்டண்ட் செய்வது வழக்கம்.

இளைஞர்கள் தங்கள் பைக்குகளில் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் பல வீடியோக்களை நாம் இணையத்திலும் பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் இப்போது காணப்போகும் வீடியோயொ சற்று வித்தியாசமானது.

இதில் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை பற்றி குறிப்பிட வேண்டும். இங்கு, பைக்குகளில் இளைஞர்கள் மட்டுமல்ல முதியவர்களும் ஸ்டண்ட் செய்வதை அடிக்கடி காண முடிகின்றது.

இந்த வீடியோவில், முதியவர் ஒருவர் பல்சர் பைக்கில் ஸ்டண்ட் செய்வதை காண முடிகின்றது. இந்த வீடியோ காசியாபாத்தின் வேவ் சிடியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை இணையதளவாசிகள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இப்போது இந்த ஸ்டண்ட்மேன் முதியவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

வீடியோவைப் பார்த்தால், இந்த முதியவருக்கு சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மோகம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால் தான் உயிரை பணயம் வைத்து பைக்கில் இப்படி ஸ்டண்ட் செய்துள்ளார்.

முதியவரிடம் இருக்கும் இந்த ஸ்டண்ட் மோகத்தை அகற்ற காசியாபாத் போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்து சலான் அனுப்பியுள்ளனர்.

ஸ்டண்ட் செய்யும் இந்த முதியவர் ‘பைக் பாபா’ என்ற பெயரில் அப்பகுதியில் மிகவும் பிரபலமாக இருப்பவர். இப்படி உயிரை பணயம் வைத்து ஸ்டண்டுகளை செய்ய வேண்டாம் என்று இளைஞர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய இந்த வயதில், இவர் தானே ஸ்டண்ட் செய்ய ஆரம்பித்தார்.

இதனால் மற்றவர்களுக்கும் கெட்ட உதாரணம் கிடைக்கும் என்பதனால், அவருக்கு பாடம் புகட்ட போலீசார் முடிவு செய்து, அவர் பெயரில் 26 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு ஆன்லைனில் அபராதம் அனுப்பியுள்ளனர்.

இந்த பைக் பாபாவின் வீடியோ ட்விட்டரில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. இவர் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல், பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட்களை செய்கிறார்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இவரது சமநிலை சற்று குறைந்தாலும், அது அவரது உயிருக்கே ஆபத்தாகலாம். அவர் ஹெல்மெட் கூட அணியாமல், திறந்த வெளியில் இந்த ஸ்டண்ட்களை செய்கிறார்.

பைக்கில் நடக்கும் இதுபோன்ற ஆபத்தான ஸ்டண்ட்கள் பல கோணங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த 19 வினாடி வீடியோவை பார்க்கும்போது அந்த முதியவர் வீடியோ எடுப்பதற்காகவே இந்த ஸ்டண்டுகளை செய்வதாகத் தெரிகிறது.
இந்த வீடியோவில் காணப்படும் ஸ்டண்டுகளை யாரும் செய்து பார்க்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img