
இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபட்ச, சஜித் பிரேமதாச உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதனிடையே இலங்கையில் வாக்காளர்ளை நோக்கி துப்பாக்கி சூடு நடைபெற்றதாக தகவல் வெளியானது
அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் வடமேற்கு பகுதியில் துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் இஸ்லாமிய குழுவினர் சென்ற பேருந்த நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
