Homeஉலகம்400 பேர் சூழ்ந்து பெண்ணின் ஆடை அவிழ்த்து.. நடுரோட்டில் நடந்த கொடூரம்!

400 பேர் சூழ்ந்து பெண்ணின் ஆடை அவிழ்த்து.. நடுரோட்டில் நடந்த கொடூரம்!

pakistan
pakistan
- Advertisement -
- Advertisement -

பாகிஸ்தானில் சுதந்திர தினத்தன்று ஒரு பெண்ணின் ஆடைகள் கிழித்து, காற்றில் வீசப்பட்டு கட்டிப்பிடித்து மானபங்கம் செய்த 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14 அன்று நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் லாகூரில் அமைந்துள்ள Minar-e-Pakistan என்ற தேசிய நினைவுச் சின்ன இடத்தில் கூடியிருந்த மக்களுடன் டிக்டாக் பிரபலமான பெண் ஒருவர் வீடியோ ஒன்றை படமாக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது 400க்கும் மேற்பட்ட கும்பல் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். அந்த பெண்ணின் ஆடைகளை கிழித்து அந்தக் கும்பல் காற்றில் வீசியுள்ளனர்.

அந்த பெண்மணி தனது 6 தோழர்களுடன் சேர்ந்து ஒரு வீடியோவை படம் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

400 பேரும் அந்த பெண்ணை மானபங்கம் செய்தபோது அந்தக் கும்பலிடம் இருந்து தப்பிக்க நிறைய முயற்சி செய்துள்ளார். ஆனாலும் பலனில்லை. காப்பாற்றச் சொல்லி கெஞ்சி இருக்கிறார்.

ஆனாலும் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இதுகுறித்து அந்த பெண்மணி கூறுகையில், ”கூட்டம் அதிகமாக இருந்தது, கூடியிருந்த மக்களை தாண்டி அந்தக் கும்பல் எங்களை நோக்கி வந்தனர்.

என் ஆடைகளை கிழித்து எறிந்தபடி அவர்கள் என்னை தள்ளி இழுத்து வந்தனர். பலர் எனக்கு உதவ முயன்றனர்.

ஆனால் கூட்டம் மிக அதிகமாக இருந்தது, அந்தக் கூட்டத்திற்குள் என்னை தள்ளி வீசினர். என்னுடன் வந்த தோழர்களும் அவர்களால் தாக்கப்பட்டதாக அந்த பெண் கூறினார்.

மேலும் மோதிரம் மற்றும் காதணிகள் பறிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, அந்த கும்பல் அவளது தோழர் ஒருவரிடம் இருந்து மொபைல் போன், அடையாள அட்டை மற்றும் 15,000 பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது. இதனால் பாகிஸ்தான் முழுவது பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து லாகூர் போலீசார் கூறுகையில், அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான் கானும், லாகூர் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தரும் இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய உத்தரவிட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அவருக்கு நேர்ந்த இந்த விஷயங்களை அவர் கண்ணீர் மல்க தெரிவித்தது காண்போரை கரையச் செய்வதாக இருந்தது.

இதனிடையே இதில் தொடர்புடைய சுமார் 400 பேரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

- Advertisement -

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,080FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,945FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு...

அகண்டா: ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி...

Ak: என்ன செஞ்சாலும் வைரல் தான்!

பொங்கல் ரிலீசாக ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் வலிமை...

குடும்பத்தோடு பொங்கல்.. புன்னகை இளவரசி கூறிய வாழ்த்து!

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து...

Latest News : Read Now...