T20: இலங்கை பெற்ற அபார வெற்றி!

Published:

icc t20 world cup
நாளைக்கு போகும் நடக்காதுicc t20 world cup

ஐ.சி.சி. டி20 போட்டிகள் 24.10,2021
– முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்`

ஞாயிற்றுகிழமை அன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ஷார்ஜாவில் நடபெற்ற குரூப் 1 ஆட்டம்; இலங்கை அணியும் வங்கதேச அணியும் மோதின. இரண்டாவது ஆட்டம் துபாயில் நடைபெற்ற குரூப் 2 ஆட்டம்; இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின.

இலங்கை – வங்கதேசம்

டாஸ் வென்ற இலங்கை அணி வங்கதேச அணியை மட்டையாடச் சொன்னது. வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ஆறாவது ஓவரில் 16 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் ஆடவந்த ஷாகிப்-அல்-ஹசன் ஏழு பந்துகளுக்கு பத்து ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் முகம்மது நயீம் (62) முஷ்ஃபிகர் ரஹீமுடன் (57) இணைந்து ஆடி ஸ்கோரை உயர்த்தினார். வங்கதேச அணி இருபது ஓவர் முடிவில் நான்கு விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது.

பின்னர் ஆடவந்த இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. குசல் பெரைரா நாலாவது பாலில் ஆட்டமிழந்தார். அடுத்த ஏழு ஓவர்களில் நிசாங்காவும், அசலங்காவும் இணைந்து அணியின் ஸ்கோரை விறுவிறு என்று உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 71 ஆக இருந்தபோது இரண்டு விக்கட்டுகள் விழுந்தன. அடுத்த ஓவரில் மேலும் ஒரு விக்கட் விழுந்தது. பின்னர் ஆட வந்த பானுகா ராஜபக்ஷே சரித் அசலங்காவுடன் இணைந்து ஆடி ஸ்கோரை உயர்த்தினார். இலங்கை அணி ஐந்து விக்கட்டிற்கு 172 ரன் எடுத்து 18.5 ஓவரில் வெற்றிக்கனியை எட்டியது.

இந்தியா – பாகிஸ்தான்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் இந்திய அணியின் பேட்டிங்கோடு தொடங்கியது. முதல் ஓவரில் ஹிட் மேன் ரோஹித் அவுட்டானார். மூன்றாவது ஓவரில் ராகுல் அவுட்டானார். ஸ்கோர் எடுக்கவேண்டிய பொறுப்பு கோலியின் தலையில் விழுந்தது. அவர் 57 ரன் எடுத்தார். ரிஷப் பந்த் 39 ரன் எடுத்தார். பிற வீரர்கள் சூர்யகுமார் யாதவ் (11), ஜதேஜா (13), ஹார்திக பாண்டியா (எட்டு பந்தில் 11) எடுத்தனர். இறுதியில் இந்தியா இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 151 ரன் எடுத்தது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இந்த ஸ்கோரை பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கட் இழப்பின்றி 152 ரன் எடுத்து வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகம்மது ரிஸ்வான் (79), அணித் தலைவர் பாபர் ஆசம் (68) மிக நன்றாக ஆடினர். பவுலிங்கை விராட் கோலி சரியாகக் கையாளவில்லை. பும்ராவை சரியாகப் பயன்படுத்தவில்லை. பவர் ப்ளே ஓவர்களில் நமது பவுலர்கள் யாரும் விக்கட் எடுக்க முடியவில்லை. அதன் பின்னர் பாகிஸ்தான் மட்டையாளர்கள் சாதாரணமாக ஆடி இலக்கை எட்டினர். இதனால் இதுவரை ஐ.சி.சி டி20 போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெற்றிராத பாகிஸ்தான் அணி முதல் முறையாக வெற்றிப் பெற்றது.

ஆனால் இந்தியாவின் கதை இதோடு முடியவில்லை; பிக்சர் அபி பாக்கி ஹை.

Related articles

Recent articles

spot_img