பஸ்ஸை தள்ளுவாங்க.. ட்ரைனை தள்ளினாங்க.. இப்போ ஃப்ளைட்யே தள்ளுறாங்க..!

Published:

flight - 2026

நேபாளத்தில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தை தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேபாளத்தில் உள்ள ஒரு விமான நிலையத்தில் பயணிகள் சிலர் விமானத்தை தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த செய்தி குறித்து நேபாள செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, நேபாளம் கோல்டி விமான நிலையத்தில் தரையிறங்க சென்ற டாடா ஏர் விமானத்தின் டயர் திடிரென வெடித்தது. இதனால் விமானம் அங்கிருந்து ஓடுதளத்தில் நகர முடியாத நிலை இருந்தது.

அதன் காரணமாக பிற விமானங்களும் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல், அங்கிருந்த பாதுகாப்பு வீரர்களுடன் சேர்ந்து பயணிகளும் விமானத்தை தள்ளினர்.

கிட்டத்தட்ட 20 பேர் விமானத்தை தள்ளும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img