‘மும்பை தாக்குதல்’ லக்வி விடுதலை: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு

உலகம்

laqviவாஷிங்டன்: மும்பைத் தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி லக்வியை பாகிஸ்தான் அரசு தடுப்பு காவலில் வைத்தது செல்லாது என்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நேற்று அறிவித்து, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த தகவல் அறிந்த வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பு வகிக்கும் அனில் வத்வா, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் வாசித்தை தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்துக்கு நேற்று நேரில் வரவழைத்து லக்வியின் விடுதலைக்கு கண்டனம் தெரிவித்தார். அமெரிக்காவும் லக்வியின் விடுதலை குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவு இணை செய்திதொடர்பாளர் ஜென் பாஸ்கி கூறுகையில், மும்பை தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் திட்டமிட்டவர்கள் என அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கை முழு அர்ப்பணிப்புடன் பின்பற்றவேண்டும் என்று பாகிஸ்தானை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.