லண்டன் பார்லிமென்ட் வளாகத்தில் அமைந்த காந்திஜி சிலைத் திறப்பு நிகழ்ச்சியில்… லண்டன்: இங்கிலாந்து பார்லிமென்ட் வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இங்கிலாந்து பார்லிமென்ட் வளாகத்தில் உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு காந்தியடிகளின் சிலையும் தற்போது நிறுவப்பட்டுள்ளது. 9 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த வெண்கலச் சிலை, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா ஆகியோரின் சிலைகளுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலைத் திறப்பு விழாவில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தனர். அப்போது காந்திஜிக்கு மிகவும் விருப்பமான ’ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த சிலைத் திறப்பு விழாவில் அமிதாப் பச்சன், காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் பலர் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகிழ்ச்சியை கேமரூன் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்….