பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியை கட்டிப்பிடித்த விவகாரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான சித்து மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அவரது நண்பரும், பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான சித்து, பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போது அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவித் பஜ்வாவை கட்டியணைத்தார். இதற்கு இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால், அடுத்த நாட்டிற்கு சென்ற போது, அவர்கள் வழங்கிய மரியாதையை தாம் ஏற்றுக் கொண்டதாக சித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில், பீகார் மாநிலம் முஸாபர்பூர் காவல் நிலையத்தில் ராஷ்ட்ரீய லோக் சமதா அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் புகார் செய்தார். இதையடுத்து சித்து மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.




