மீன்களைச் சுகாதாரமாக கையாள்வது தொடர்பான கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்துவதற்கான நிதியாதாராங்களைப் பெற ஜப்பானில் நடைபெறும் இந்தக் கண்காட்சி உதவும் எனக் கூறினார்.
வரும் ஜனவரி மாதம் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில், மீன்தொழில் தொடர்பான முக்கிய நிறுவனங்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் இந்தப் பயணத்தின் போது செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்




