
வெனிசுலா நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலாவின் அரகுவா மாநிலத்தில் உள்ள லாஸ் டெஜெரியாஸ் என்ற இடத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.அங்கு கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதன் காரணமாக வெனிசுலா பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அரகுவா பகுதியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அவசரகால நிலையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மீட்பு, நிவாரண பணியில் தேசிய பேராபத்து மேலாண் அமைப்பு மற்றும் காவல் அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த பகுதிக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் மாயமான 50 பேரின் நிலை என்ன எனவும் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது குறித்தும் பாதுகாப்பு குழு கண்காணித்து வருகிறது.