காசாவில் அகதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் தீ- 21 பேர் பலி..

images 68 1 - 2026

பாலஸ்தீனத்தின் காசாவில் அகதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 7 குழந்தைகள் உள்பட 21 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலஸ்தீனத்தின்  வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா பகுதியில் உள்ள அகதிகள் நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் மேல் தளத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. குடியிருப்பு வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலாக காட்சி அளித்தது. 

பயங்கர தீ விபத்தி சிக்கி 21 பேர் உடல் கருகி இறந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழுந்துவிட்டு எரியும் கட்டடத்திற்கு வெளியே மக்கள் அலறுவதைக் காண முடிந்தது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெருக்களில் அழுது பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையின்படி, கட்டடத்திற்குள் அதிக அளவு பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இது தீ பரவுவதற்கு காரணமாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கட்டடத்தில் இருந்த அனைவரும் பலியாகி உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன காசாவில் உள்ள எட்டு அகதிகள் முகாம்களில் ஜபாலியாவும் ஒன்றாகும், இது 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மற்றும் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories