பாகிஸ்தான் நாட்டு உள்துறை மந்திரி அஹ்சன் இக்பால், நேற்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்குட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய இளைஞர் அவரை நோக்கி சுட்டதில், அவரது வலதுகை தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. இதை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அபாயகரமான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு, பாகிஸ்தான் பெண் கல்வி போராளியும், இளம் வயதில் நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசப் சாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உள்துறை அமைச்சர் சுடப்பட்ட சம்பவம் வருத்தமளிக்கிறது. பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க தேவையான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது நடத்தத்பட்ட தாக்குதலுக்கு மாலாலா கண்டனம்
Popular Categories



