ஈராக்கில் வரும் 12ம் தேதி பாரளுமன்ற தேர்தல் நடைபெற் உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பருக் அல்-சுபோரி, மோசூல் சிட்டி அருகே கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவில் நடந்துள்ளது என்றும், கொலை செய்த நபர் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பேர் அங்கிருந்து சென்று விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொலை செய்யப்பட்ட பருக் அல்-சுபோரி, சஹுத்தின் மாகாணத்தில் உள்ள திக்ரித் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
ஈராக் பாராளுமன்றத்திற்கு வரும் 12ம் தேதி நடக்க உள்ள தேர்தலில் 329 பாராளுமன்ற சீட்களுக்கு 7,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது