இஸ்லாமிய பழக்க வழக்கங்களுக்கு தடை விதிக்கும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது டென்மார்க் இறுதியாக இணைந்துள்ளது
பொது இடங்களில் முகங்களை முழுவதுமாக மறைக்கும் புர்கா அல்லது கண்களை மட்டும் வெளிக்காட்டும் நிக்வாப் ஆகிய ஆடைகளை அணிவதற்கு தடை விதிப்பட்டுள்ளதாக டென்மார்க் நாடாளுமன்றத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டடுள்ளது.
இத்தீர்மாணத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 70-க்கு 35 ஓட்டுகள் பெற்றதால் தற்போது இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் படி பொது இடங்களில் முகங்களை முழுவதுமாக மறைக்கும் புர்கா அல்லது கண்களை மட்டும் வெளிக்காட்டும் நிக்வாப் ஆகிய ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறும் பட்சத்தில் 1,000 kroner (இந்திய மதிப்பில் ரூ.8200) அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தவறினை மீண்டும் மீண்டும் செய்யும் பட்சத்தில் 10,000 kroner (இந்திய மதிப்பில் ரூ.82,000) அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டம் குறித்து சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கையில்.. இச்சட்டமானது இஸ்லாமியர்களின் உரிமையினை மீறுவதாக உள்ளது. மேலும் அவர்களின் தனி மனித உரிமையினை சிதைப்பதாகவும் உள்ளது என தெரிவிக்கின்றனர்.
எனினும், டென்மார்கில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வரும் ஆயிஷா ஹலீம் என்பவர் இது குறித்து தெரிவிக்கையில்… டென்மார்க்கில் 6 ஆண்டுகளாக நான் வசித்து வருகின்றேன், நான் புர்கா அணிவதை குறித்து எனது கணவர் எந்த கருத்தினையும் தெரிவித்ததில்லை, மேலும் மத ரீதியாக புர்காவை அணிந்து தான் ஆகவேண்டும் என எவரும் கட்டாயப் படுத்துவதில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த பிரான்ஸ் நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டு புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் இஸ்லாமிய பழக்க வழக்கங்களுக்கு தடை விதித்த முதல் ஐரோப்பிய நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.




IT IS CRUEL THAT MUSLIMS WOMEN ARE TREATED AS SLAVES. THEY CANNOT WEAR THE DRESS OF THEIR CHOICE AND NEED TO COVER THEIR WHOLE BODY , HEAD TO FOOT EVEN WHEN THE SUN IS HARSH. THEY ARE NOT PERMITTED TO GO TO PUBLIC SCHOOLS. AS ONE OF THE IMAM IN KERALA SAID THE WOMEN ARE BORNE TO PRODUCE CHILDREN AND DO HOUSE HOLD WORK. ARE WE LIVING IN ADVANCED AGE ?? A LOT MORE CAN BE SAID ABOUT THE ATTROCITIES DONE TO THE WOMEN FOLK IN MUSLIM COMMUNITY