இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர டிரம்ப் விதித்த தடை செல்லும் என அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், வடகொரியா, வெனிசுலா, சாத் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வர தடை விதித்தார். டொனால்டு டிரம்ப் அரசின் இம்முடிவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, இந்த விவகாரம் அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு சென்றது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிரம்பின் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தனர். இதனால், 8 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் அமலுக்கு வருகிறது. இத்தீர்ப்புக்கு டொனால்டு டிரம்ப் வரவேற்பு அளித்துள்ளார்.



