மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 99 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உள்பட 103 பேருடன் ஏரோமெக்சிகோ விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஆனால், ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமானம் அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதை, பயணி ஒருவர் தனது செல்போனில் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில், 49 பேர் காயமடைந்தனர். விமானி மற்றும் சில பயணிகளுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமான உயிரிழப்பு ஏற்படவில்லை.



