பலரை ஒன்றிணைத்த ஃபேஸ்புக் விவாகரத்துக்கும் உதவி செய்தது!

facebook-divorcee விருப்பப் படாத ஒரு திருமண பந்தத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது? அதுவும் குறிப்பாக உங்கள் விவாகரத்து கோப்புகளைப் பெறாமல் அடுத்தவர் தவிர்த்து வந்தால்..? இதற்கும் வழிகாட்டியது ஃபேஸ்புக்! அமெரிக்காவின் மன்ஹட்டன் உச்ச நீதிமன்ற நீதிபதி மனது வைத்தது போல், உங்களுக்கும் யாராவது மனது வைத்தால்..! அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் சேனா பிளட் சராகு. இவரது மனைவி லெனோரா பைடூ (26). இந்த தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மன்ஹாட்டன் உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு அளித்திருந்தனர். மேலும், விக்டர் சேனா தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டார். தன் கணவர் எங்கே வேலை செய்கிறார் என்று தெரியாத சூழலில், அவரது ‘பேஸ்புக்’ கணக்கு மூலம் சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றத்தில் மனைவி பைடூ மனு அளித்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி மேத்திவ் கூப்பர் ஏற்றுக் கொண்டார். அதை அடுத்து, பேஸ்புக்கில் நோட்டிபிகேஷனாக விக்டருக்கு நோட்டீச் அனுப்பப் பட்டது. ஒருவாரம் அதைத் தவிர்த்தார் விக்டர், ஆனால், மூன்றாவது வாரம் மூன்றாவது முறையாக வந்த நோட்டீஸை திறந்து பார்த்தார். அதன் மூலம் தன் விவாகரத்து தகவல்களை பரிமாறிக் கொள்ள வழி செய்யப்பட்டது. பின்னர் அந்தத் தம்பதிகளுக்கு உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. தன் கணவர் அல்லது துணை எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில், அவரது விலாசம் அறியாத பட்சத்தில், அவர் நிரந்தர முகவரியில் இல்லாமலோ அல்லது வேலையில் இல்லாமலோ இருக்கும் பட்சத்தில், பேஸ்புக் கணக்கின் மூலம் அவரைத் தொடர்பு கொண்டு, சட்டப்படி, இவ்வாறு விவாகரத்து வழங்கி, நீதிபதி ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளார். [Image credit: Alamy] SOURCE: New York Daily News