பிரிட்டன் அரச குடும்பத்தில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்

உலகம்

04 Sep24 same sex marriage 01 - 2026

பிரிட்டன் அரச குடும்பத்தில் இளவரசர் ஹரி – மெர்க்கல் திருணத்திற்கு பிறகு முதல் முறையாக ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் நடைபெற்றுள்ளது.

அரச குடும்பத்தை சேர்ந்த முதல் ஓரினச்சேர்க்கையாளர் Lord Ivar Mountbatten. இவர் பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்களின் மூன்றாவது சகோதரர் ஆவார்.

2006 ஆம் ஆண்டு பென்னி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் இவருக்கு அந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை.

இதனால், 2011 ஆம் ஆண்டு தனது மனைவி பென்னியை விவாகரத்து செய்துவிட்டு , James Coyle என்பவருடன் ஓரினச்சேர்க்கை உறவில் இருந்து வந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததையடுத்து சுமார் 60 விருந்தினர்கள் மற்றும் தனது மனைவி, 3 மகள்கள் முன்னிலையில், Lord Ivar Mountbatten தனது ஓரினச்சேர்க்கை நண்பனை மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார்.

மேலும், இந்த திருமணத்தின்போது தனது மனைவி மற்றும் நண்பன் ஆகிய இருவருடன் இணைந்தும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.