தமிழகத்தில் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணமோ, மற்ற பள்ளிகளுடன் இணைக்கும் எண்ணமோ அரசுக்கு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறி போராட்டம் நடத்துபவர்கள் அந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆலோசனை வழங்க வேண்டும் என்று செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்.




