நியூ யார்க்: அமெரிக்காவில் இரு வேறு கொள்ளை முயற்சிகளின் போது, இந்தியர்கள் இருவர் 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் அங்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள நியூ ஹெவன் என்ற இடத்தில், கேஸ் நிறுவனம் ஒன்றில் கிளெர்க்காகப் பணிபுரிந்து வந்தவர் இந்தியாவைச் சேர்ந்த சஞ்சய் பாட்டீல் (39). இவரிடம் நடந்த கொள்ளை முயற்சியில், அவரது மார்பில் 3 குண்டும், கையில் ஒரு குண்டும் பாய்ந்துள்ளது. திங்கள் இரவு முகமூடி அணிந்த இருவர் சஞ்சய்யை சுட்டுக் கொன்றுள்ளனர். அடுத்து, இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராஜேஷ் மடாலா (35) என்பவரும் கொள்ளை முயற்சி ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரும் பியோரியாவில் உள்ள ஆட்டோ கேஸ் நிலையத்தில் வேலை செய்து வந்தவராம். அவரை அடையாளம் தெரியாத நபர் சுட்டுக் கொன்று தப்பியுள்ளார். இந்தச் சம்பவங்கள் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கொள்ளையர்களால் இந்தியர்கள் இருவர் சுட்டுக் கொலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari