ஹங்கேரி – செர்பியா எல்லை வழியே, ஐரோப்பிய ஒன்றித்துக்குள் செல்ல முயன்ற அகதிகளை எட்டி உதைத்த ஒளிப்பதிவாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பெட்ரா லாஸ்லோ என்ற அந்த பெண் ஒளிப்பதிவாளர், அகதிகளை எட்டி உதைக்கும் காட்சியானது சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது. தேச எல்லைகளை கடந்து அவரது செயலுக்கு எதிராக கண்டனங்களும் எழுந்தன.




