இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில்- ராஜபட்ச தரப்பு எம்பிக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையேயான மோதலில் சபாநாயகர் கருஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார்.
இலங்கை நாடாளுமன்றதில் இன்று ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபட்ச எம்.பி.,க்கள் இடையே கடும் மோதல் ஏறு்பட்டது. லேசான கைலப்பிலும் ஈடுபட்டனர்.
இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப் பட்டதாக அதிபர் சிறீசேன அறிவித்த பின்னர், நாடாளுமன்ற கலைப்புக்கு நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், நேற்று நடந்த கூட்டத்தில் ராஜபட்ச மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.
இதை அடுத்து இன்று 2 ஆவது நாளாக கூடிய நாடாளுமன்றத்தில் ராஜபட்ச கடும் அமளி துமளிக்கிடையே பேசத் தொடங்கினார். இவரது உரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என ரணில் ஆதரவு எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். இருப்பினும் ராஜபட்ச தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இதை அடுத்து, அதிபர் சிறீசேனவுக்கு எதிராக ரணில் கட்சி ஆதரவு எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து எம்.பி.,க்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.
சபாநாயகர் இருக்கை அருகே சென்ற எம்.பி.,க்கள் அவரை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். சில எம்.பி.,க்கள் லேசான கைகலப்பில் ஈடுபட்டனர். சிலர் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது. எம்.பி.,க்கள் மோதல் சம்பவத்தால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சபாநாயகர், மகிந்தா ராஜபட்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அவையில் இருந்து வெளியேறினர்.